சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐஐடிஎம் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளையை தொடங்கி வைத்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஐஐடிஎம் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, இருவாரம் நடைபெறவுள்ள சாஸ்த்ரா, சாரங் ஆகிய விழாக்களையும் தொடங்கி வைத்த அவர், முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக, மலேசியா, ஜெர்மனி, துபாய், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முக்கிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
















