ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவின்போது கோயில் வளாகத்தில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த உமாதேவி என்ற பக்தர் திருவாசகப் பாடல்களை உருக்கத்துடன் பாடினார். அவரது குரலில் வெளிப்பட்ட பக்தி உணர்வும், திருவாசகத்தின் ஆழ்ந்த பொருளும் அங்கு கூடியிருந்த பக்தர்களின் மனங்களை உருகச் செய்தது. “திருவாசகத்துக்கு உருகாதார்
ஒருவாசகத்துக்கும் உருகார்” என்ற பழமொழியை நினைவூட்டும் வகையில், அந்தப் பாடல் ஒலித்த நிமிடங்களில் பல பக்தர்கள் கண்கலங்கியபடி இறைவனை வணங்கினர்.
















