அதிமுக, பாஜகவே பலமான கூட்டணி என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்துள்ளார்.
சிவகங்கையில் ராணி வேலு நாச்சியாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது அதிமுக – பாஜக கூட்டணி 220 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என தெரிவித்தார். எந்த கட்சிகளும் சேராவிட்டாலும் 180 இடங்களுக்கு மேல் வெல்வோம் என்றும் அவர் கூறினார்.
“விஜயை பார்த்து திமுகவுக்குதான் பயம்; அதிமுக அஞ்சத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
2026ல் திமுக – தவெக இடையேதான் போட்டி என்றும் அது 2-ம் இடம் யார் என்பதற்குத்தான் என்றும் திண்டுக்கல் சீனிவாசன குறிப்பிட்டார்.
















