சாராய ஆலைகளை மூடாமல், போதைப்பொருட்களை ஒழிக்காமல், போதைப்பொருளுக்கு எதிரான வைகோவின் நடைபயணத்தை முதல்வர் தொடங்கி வைத்திருப்பது அப்பட்டமான நாடகம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,புதுக்கோட்டையில் ஜார்ஜ் கோட்டையை பிடிப்பதற்கான வியூகத்தை வகுக்க உள்ளதாக தெரிவித்தார்.
ஓய்வூதியத் திட்டம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பு, உச்சபட்ச தேர்தல் நாடகம் என்றும், தமிழக அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால்தான் தமிழக அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும், “சாராய ஆலைகளை மூடாமல் போதைப்பொருளுக்கு எதிராக நடைபயணம் செல்வதில் என்ன பயன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
வைகோ நடைபயணம் செல்ல வேண்டியது அறிவாலயத்திற்குத்தான் என்றும், போதைப்பொருளுக்கு எதிரான வைகோவின் நடைபயணத்தை முதல்வர் தொடங்கி வைத்திருப்பது அப்பட்டமான நாடகம் எனறும் தமிழிசை குறிப்பிட்டார்.
















