கரும்புக்கான கொள்முதல் விலையை, தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி விவசாயிகளிடம் இருந்து கம்புகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இந்தநிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட கம்புகளை அறுவடை செய்யும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன.
ஒரு முழு கரும்பு 38 ரூபாய்-க்கு வாங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளதாகவும், ஆனால் இது போதுமானதானது அல்ல எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே அறுப்பு கூலி, போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















