பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், நடப்பாண்டும் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் அவனியாபுரம் பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு, விழா கமிட்டி சார்பில் நடைபெற்று வருகிறது.
மஞ்சமலை ஆற்றில் உள்ள வாடிவாசல் பகுதி ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும், பார்வையாளர் அமரும் இடத்தில் தடுப்பு வேலிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
















