ஆண்டிபட்டி அருகே கணவரின் மதுபழக்கத்தால், 2 மகன்களுடன் தாய்
தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவுக்குட்பட்ட தண்டியன்குளம் மலை கிராமத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான ஜெயப்பெருமாள் என்பவர் நாள்தோறும் மது அருந்திவிட்டு மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம்போல், இரவு மது அருந்திவிட்டு மனைவி தனலட்சுமியுடன் சண்டையிட்டுள்ளார்.
இதனால், மனமுடைந்த தனலட்சுமி 2 மகன்களுடன் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















