ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ள திமுக அமைச்சர்கள் தொடர்புடைய ஊழல் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்கள்
எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ள பட்டியலில், நகராட்சி நிர்வாகத்துறையில் 64 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கத்துறையில் 60 ஆயிரம் கோடி ரூபாய், டாஸ்மாக் துறையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி துறையில் 60 ஆயிரம் கோடி, எரிசக்தி துறையில் 55 கோடி, பத்திரப்பதிவு துறையில் 20 கோடி ரூபாய் அளவிற்கு அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறையில் 20 ஆயிரம் கோடி, நீர் ஆதாரத்துறையில் 17 ஆயிரம் கோடி, சென்னை மாநகராட்சியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் துறையில் 8 ஆயிரம் கோடி, சமூக நலத்துறையில் 4 ஆயிரத்து 500 கோடி, உயர்கல்வித்துறையில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி, மக்கள் நல்வாழ்வு, வேளாண்மை ஆகிய 3 துறைகளில் தலா 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஆதி திராவிடர் நலன் துறையில் தலா ஆயிரம் கோடி ரூபாய் அளவிக்கு ஊழல் நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் துறையில் 750 கோடி, விளையாட்டுத்துறை மற்றும் சிறைத் துறையில் தலா 500 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாத் துறை மற்றும் பால்வளத்துறையில் தலா 250 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















