திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் தனது செல்போனை திருடிய நபரை முதியவர் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
வேடசந்தூர் அருகே ஆத்துமேடு பேருந்து நிறுத்தத்தில் முதியவர் அமர்ந்திருந்தார்.
அப்போது அவரை நோட்டமிட்ட நபர் ஒருவர், முதியவரின் செல்போனை எடுத்து தனது வேட்டிக்குள் மறைத்து வைத்துக்கொண்டார்.
இதனைக் கண்டுபிடித்த முதியவர், அந்த நபரின் கன்னத்தில் பலமாக அறைந்தார்.
பலமுறை அடி வாங்கியதால் வலி தாங்காத அந்த நபர், செல்போனை ஒப்படைத்துவிட்டு ஓட்டம் பிடித்தார்.
















