ஜனவரி மூன்றாம் தேதி அமெரிக்க துருப்புகளால் சிறைபிடிக்கப்பட்ட வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவில் தற்போது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டுள்ளார்…
இதற்கெல்லாம் முழு முதற்காரணம் மதுரோவின் இந்த டான்ஸ்தான் என்றால் நம்ப முடிகிறதா?
அமெரிக்க அதிபர் டிரம்ப், வெனிசுலாவை கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தியபோதும், அதனைக் கண்டுகொள்ளாத மதுரோ, பாடல் பாடுவதிலும், உற்சாகமாக நடனமாடுவதில் கவனம் செலுத்தி வந்தார்…
அப்படித்தான் கடந்த நவம்பரில் வெனிசுலா அதிபர் மதுரோ, பிரிட்டன் பாடகர் ஜான் லெனனின், இமேஜின் ஆல்பத்தில் வரும் பாடல்களைப் பாடுவது கேமராவில் பதிவாகியிருந்தது..
ஒரு கூட்டத்தில் உரையாற்றிய மதுரோ, பிரிட்டிஷ் பாடகர் ஜான் லெனான் ஆல்பத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, ஜான் லெனான் சொல்வது போல், அமைதிக்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்றார்….
போதைப்பொருள் கடத்தலை தடுக்க டிரம்ப் நிர்வாகம் வெனிசுலா அருகே தனது ராணுவ இருப்பை வலுப்படுத்தியபோது இந்தச் சம்பவம் நடந்தது…
அதன் தொடர்ச்சியாக நவம்பர் மாத இறுதியில், கராகஸில் நடந்த மாணவர் பேரணியில் மேடையேறிய மதுரோ, தனது சொந்தக் குரலில் துள்ளல் நடனத்துடன் ஆடிப்பாடினார்.
“No war, no crazy war, no, no, no. Peace, peace, yes peace.” எனப் பாடியபோது அங்கிருந்த அவரது ஆதரவாளர்களும் துள்ளிக் குதித்தனர்.
இது அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பாயின. மதுரோவின் இந்த நடனம் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எரிச்சலூட்டியது..
மதுரோவின் நடன அசைவு, நடனமாடுவதில் விருப்பம் கொண்ட டிரம்பைக் கவரவில்லை என்று கூறப்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி உண்மையில், வெனிசுலா அதிபரின் இது போன்ற செயல்கள்தான், அமெரிக்க அதிபரை மதுரோவுக்கு எதிரான நடவடிக்கைக்கு உத்தரவிட தூண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது…
வெனிசுலாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்த சிறிது நேரத்தில், குறிப்பாகப் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துறைமுகம் ஒன்றின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய சிறிதுநேரத்தில், மதுரோவின் நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது…
மேலும் வெனிசுலா அதிபர் பொதுவெளியில் நடனமாடுவதும், அவரது உரையும் அமெரிக்க அதிபர் டிரம்பை கேலிசெய்வது போல் சித்தரிக்கப்பட்டது…
அதன் எதிரொலியாக “Operation Absolute Resolve”-க்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸ் இருவரும் சிறைபிடிக்கப்பட்டனர்,வெனிசுலா அதிபரின் நடனம் டிரம்ப்பை கோபப்படுத்தியதால் ஏற்பட்ட விளைவுகளைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது…
எனவே, டிரம்பை கோபப்படுத்தாதீர்கள், இல்லையெனில் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்..
















