கோவையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் 2024ஆம் ஆண்டு
விநாயகர் சதுர்த்தி விழாவில் நடந்த தகராறில் கோகுல கிருஷ்ணன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், ஜாமினில் வெளிவந்த பிரவீன்குமார், மைசூருவில் வேலை செய்து வந்த நிலையில், அண்மையில் கோவை வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கெம்பட்டி காலனி அருகே நண்பர்களுடன் சேர்ந்து பிரவீன்குமார் மது அருந்தியுள்ளார்.
அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் பிரவீன்குமாரை கல்லால் தாக்கி கொலை விட்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
















