அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் சேர வாய்ப்பில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்ததாக தெரிவித்தார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை எனறும், சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை சேர்க்க வாய்ப்பு இல்லை என்றும், அனைத்து கட்சிகளும் கூட்டணியில் இணைந்த பின் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்படும் என இபிஎஸ் தெரிவித்தார்.
















