சிவகங்கையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதர இயக்க பணியாளர்கள் 3ஆம் நாள் ஆர்ப்பாட்டத்தில் முக்காடு அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
அடிப்படை ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ள நிலையில், 3ஆம் நாள் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் தலையில் முக்காடு அணிந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
















