எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பு சுமுகமாக இருந்ததாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது, பிரதமர் மோடி தமிழகம் வருகை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், பிரதமர் சென்னை அல்லது மதுரையில் நிகழ்ச்சியை நடத்துவது து குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன் உடன் பாஜக மாநில துணைத் தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், சக்கரவர்த்தி, கேபி ராமலிங்கம் மற்றும் அணிகள் மற்றும் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் கே டி ராகவன் ஆகியோர் இருந்தனர்.
















