டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசிய நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக சில மாதங்களுக்கு முன்னா் டிடிவி தினகரன் அறிவித்திருந்தாா். இந்நிலையில் பெங்களூருவிலிருந்து டெல்லி சென்ற டிடிவி தினகரன் நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.
அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இடம் பெற வேண்டும் என்ற விருப்பத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் தேர்தல் கூட்டணி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் டிடிவி தினகரன் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க இணையும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















