பிரதமர் மோடி தலைமையில் வருகிற 23ஆம் தேதி மதுரை அம்மா திடலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.
இந்நிலையில், மதுரை அம்மா திடலில் வரும் 23ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறக் கூடிய அனைத்து கட்சியின் முக்கிய தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
தொகுதி பங்கீடுகள் குறித்த பேச்சுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் அண்மையில் சந்தித்து பேசியிது குறிப்பிடத்தக்கது.
















