உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கஞ்சா புழக்கத்தில் சென்னைக்கு அடுத்த இடத்தில் திருப்பூர் உள்ளதாக கூறினார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும், என்ன வாக்குறுதி கொடுத்தோம் என்பது தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார் என்றும் அவர் சாடினார்.
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்பது எங்கள் கனவு; அதற்கு திமுக ஆட்சியில் இருக்கக் கூடாது என்றும் அண்ணாமலை கூறினார்.
















