திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களை மலர்தூவி வரவேற்பதற்காக அரசுப் பள்ளி மாணவிகளைப் பங்கேற்க வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாலாறு தடுப்பணையை புனரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நீர்வளத்துறை சார்பில் நடைபெற்றது. இதில் திமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள் வருகை தந்தனர். இவர்களை மலர்தூவி வரவேற்பதற்காக அரசுப் பள்ளி மாணவிகள் சீருடையுடன் பங்கேற்க நிர்பந்திக்கப்பட்டனர்.
அதிகாரிகளின் இந்தச் செயலுக்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
















