அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2-வது நாளாக நேர்காணல் நடத்தினார்.
அதிமுக சார்பில் போட்டியிட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ள நிலையில், தொகுதி வாரியாக அவர்களிடம் இபிஎஸ் நேர்காணல் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கன்னியாகுமரி, தஞ்சை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களின் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட மனு அளித்தவர்களிடம் 2-வது நாளாக இபிஎஸ் நேர்க்காணல் நடத்தினார்.
அப்போது, கட்சிக்காக செய்த பணிகள் பற்றி கேட்டறிந்த இபிஎஸ், விருப்பமனு அளித்த தொகுதிகளில் யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
















