இந்தியை எதிர்த்து வரும் ஆளுங்கட்சி குடும்பத்தை சேர்ந்த பெண் எம்.பி., இந்தியை படித்து பட்டம் பெற்றவரா? இல்லையா? என காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பராசக்தி திரைப்படத்தை தயாரித்ததே தமிழகத்தின் ஆளுங்கட்சி குடும்பம் தான் என தெரிவித்தார்.
காங்கிரஸ் இந்தியை திணித்தது என்றும் ஆனால் தாங்கள் எதிர்ப்பதாக ஆளுங்கட்சி குடும்பத்தினர் கூறி வருவதாகவும் அவர் கூறினார்.
அந்த குடும்பத்தை சேர்ந்த பெண் எம்.பி. இந்தி படித்து பட்டம் பெற்றவரா? இல்லையா? என்றும், தனது பேரனுக்கு ஆங்கிலத்தைவிட இந்தி நன்றாக தெரியும் என முன்னாள் முதல்வர் கூறினாரா? இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஊருக்கு உபதேசம் வழங்கிவிட்டு தங்கள் குடும்பத்தினருக்கு இந்தி கற்றுக் கொடுக்கிறது அந்த குடும்பம் என்றும் திருச்சி வேலுசாமி கூறினார்.
















