ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொண்டு அதிமுக தலைமையகத்திற்கு சென்றவரை, கட்சி நிர்வாகிகள் திருப்பி அனுப்பினர்.
ஜெயலட்சுமி என்பவர் தன்னை ஜெயலலிதாவின் மகள் என கூறிகொள்கிறார். இந்நிலையில், அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.
ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்ததாகவும், நேர்காணலில் பங்கேற்க தற்போது வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனை கேட்ட கட்சி நிர்வாகிகள், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை அவமதிக்கும் நோக்கில் செயல்படுவதாக கூறி அவரை அங்கிருந்து திருப்பி அனுப்பினர்.
















