தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் பாஜக மாநில இளைஞரணி தலைவர் S.G சூர்யா தாக்கப்பட்டதை கண்டித்து கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பாக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
















