திண்டுக்கல் அருகே உள்ள கோயிலில் காலாவதியான ரசீது மீண்டும் விற்பனை செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள கோபிநாத சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கடந்த 3 மற்றும் 8ம் தேதிகளில் அச்சிடப்பட்ட ரசீது வழங்கப்பட்டது.
அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கோயில் நிர்வாகத்தினர் காலாவதியான ரசீதுகளை கொடுத்து பணம் திருடுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
















