மார்கழி மாத அஷ்டமியை ஒட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சப்பர உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
உலகாளும் ஈசன் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளக்கும் மார்கழி மாத அஷ்டமி சப்பரம் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்
கயிலாய வாத்தியங்களை சிவனடியார்கள் இசைத்துக் கொண்டு பரவசத்தில் ஆடிச் செல்கின்றனர்
மதுரையின் வெளிவீதிகளில் வலம் வரும் அஷ்டமி சப்பரம்
தேருக்கு முன் சிவனடியார்கள் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளக்கும் விதமாக அரிசியை தூவிச் செல்கின்றனர்.
சுந்தரேஸ்வரரும் பிரியாவிடை ஒரு சப்பரத்திலும், மீனாட்சியம்மன் தனி சப்பரத்திலும் வலம் வருகின்றனர்
















