தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் திமுகவினருடன் ஏற்பட்ட மோதல் : பாஜக இளைஞரணித் தலைவர் எஸ்.ஜி. சூர்யாவுடன் பாஜக நிர்வாகி கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் சந்திப்பு
பத்திரிகையாளர் எனும் போர்வையில் திமுகவிடம் காசு வாங்கி கொண்டு வன்முறையில் ஈடுபடும் செந்தில்வேல் மீது வருமான வரித்துறை சோதனை நடத்த வலியுறுத்துவோம் என பாஜகவை சேர்ந்த கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்
நடந்த சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் முக்கியமான இடத்தில் திங்கட்கிழமை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் அனுமதியைப் பெற்று முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்
இதுபோன்ற தாக்குதலுக்கு எல்லாம் பாஜகவினர் அஞ்சமாட்டோம்.
எங்களாலும் அதுபோன்ற செயலில் ஈடுபட முடியும். எல்லா அளவிலும் இறங்கி திமுகவினருக்கு பதிலடி கொடுக்க நாங்களும் தயார்
உள்துறை அமைச்சருக்கும் , தேசிய செயல் தலைவருக்கும் இந்தப் பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளோம்
பத்திரிகையாளர் எனும் போர்வையில் திமுகவிடம் காசு வாங்கிக்கொண்டு இதுபோன்ற செயலில் ஈடுபடும் செந்தில்வேல் மீது வருமான வரித்துறை சோதனை நடத்த வலியுறுத்துவோம்
அவரது வங்கி பரிவர்த்தனை உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டும் , வள்ளியூரில் அவர் பெரிய வீடு கட்டிவருகிறார். இதற்கான பணம் அவருக்கு எப்படி கிடைத்தது என வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும்.
என்று கூறினார்.
















