ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வை கண்டித்தும் ஆட்சி மாற்றம் கோரியும் ஈரான் மக்கள் 14 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் வன்முறை கொளுந்துவிட்டு எரிகிறது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை குழந்தைகள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
















