செங்கல்பட்டு அருகே கஞ்சா போதையில் தகராறு செய்ததாக கைதான இளைஞர், மருத்துவமனையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கூடுவாஞ்சேரியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த வந்தவர்களிடம் காக்கா பாலாஜி என்பவர் பணம் கேட்டு மிரட்டினார். புகாரின் பேரில் போலீசார், அவரைக் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.
அப்போது மருத்துவர்களை ஒருமையில் பேசியும் வழக்கு ஆவணங்களை பறித்தும் அட்டகாசம் செய்தார். தொடர்ந்து பரிசோதனை முடிந்த நிலையில் இளைஞரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
















