உலகளவில் கம்யூனிஸ்ட் இயக்கம் காணாமல் போய்விட்டதாகவும், இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்து வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக பிரதிநிதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்தார். அப்போது பேசிய அவர், கேரளாவில் தொண்டர்கள் வலிமையாக நின்று பாஜகவை வெற்றி பெற வைத்ததாக தெரிவித்தார்.
எல்டிஎப் மற்றும் யுடிஎப் கூட்டணி மேட்ச் பிக்சிங் செய்து, கேரள மாநிலத்தை தேக்கம் அடைய வைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார். உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போய்விட்டதாகவும் அவர் கூறினார்.
அதேபோல் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் காலமும் முடிந்து வருவதாகவும் அவர் விமர்சித்தார். மேலும் கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
















