திமுகவின் ஊழல்களை மக்கள் கவனித்து கொண்டு இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அமைச்சர்களின் ஊழலை அனைவரும் அறிய வேண்டும் என தெரிவித்த அவர், அமைச்சர் கே.என்.நேரு மீது பெயரளவிற்கு மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்,
திமுகவின் ஊழல்களை மக்கள் பார்த்துக்கொண்டிருப்பதாகவும், தேர்தலில் திமுகவினருக்கு மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
சட்டமன்ற தேர்தல் 4 முனை போட்டிகளை கொண்டதாக இருக்கும் என்றும், NDA கூட்டணிக்கு வலிமையும், பொதுமக்களின் ஆசீர்வாதமும் உள்ளது என்றும் அண்ணாமலை குறிபபிட்டார்.
















