சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்குள் புகுந்து ரடிவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இவரது காதலி என கூறப்படும் சுசித்ரா என்பவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அதனை பார்க்க சென்ற ஆதிகேசவன், மருத்துவமனையிலேயே உறங்கியுள்ளார்.
அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள், ஆதியை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 3 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் நிலவும் பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
















