அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி மூன்றாவது நாளாக நேர்காணல் நடத்தினார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மனுக்களை அளித்தனர்.
அதிமுக சார்பில் போட்டியிட 10 ஆயிரத்து 175 மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் அதன் மீதான பரிசீலனை மற்றும் நேர்காணலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தினார்.
மூன்றாவது நாளாக நடத்தப்பட்ட இந்த நேர்காணலில் விருதுநகர் , கடலூர் , நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது.
















