சென்னையில் டபுள் டக்கர் பேருந்து சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1970ஆம் ஆண்டுகளில் சென்னையில் இயங்கி வந்த டபுள் டக்கர் பேருந்துகள், சென்னையின் அடையாளமாகவே திகழ்ந்து வந்தன. தாம்பரத்தில் இருந்து உயர்நீதிமன்றம் வரை இயக்கப்பட்ட அப்பேருந்துகள் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் கூட, பராமரிப்பு செலவு அதிகளவில் இருந்ததால் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்தின் சேவை சென்னையில் தொடங்கியுள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பேருந்தின் சேவையை தொடங்கி வைத்த பின் அதனை பார்வையிட்டார். சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை இந்த டபுள் டக்கர் மின்சாரப் பேருந்து இயக்கப்பட உள்ளது.
















