திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் QR கோடு மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டது.
வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கொடைக்கானல் சுற்றுலா தளத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். குணா குகை ,தூண் பாறை, மோயர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளிடம் நேரில் நுழைவு கட்டணம் பெறப்பட்டு வருகிறது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதால், தற்போது க்யூ ஆர் கோடு வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
அனைத்து இடங்களிலும் 300 மீட்டர் இடைவெளியில் க்யூ ஆர் கோடு வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் விரைவாக கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















