இந்தியா – ஜெர்மனி இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜெர்மனி பிரதமர் பிரட்ரிக் மெர்ஸ், 2 நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். அவர் குஜராத்தின் அகமதாபாத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, தொழில், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கூட்டு பிரகடனம் அடங்கும் என தெரிவித்தார்.
மேலும், வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு தலைமைச் செயல் அதிகாரிகள் அமைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்டவையும் அடங்கும் என விக்ரம் மிஸ்ரி கூறினார்.
















