பணி நிரந்தரம் கோரி சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியான பணி நிரந்தரம் செய்ய கோரி பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட வந்த பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
அப்போது, எத்தனை முறை கைது செய்து சிறையில் அடைத்தாலும் தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என பகுதி நேர ஆசிரியர்கள் முழக்கம் எழுப்பினர்.
















