2026-ல் அமையும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் புதிய கல்விக் கொள்கை உடனே அமல்படுத்தப்படும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை மடிப்பாக்கத்தில் மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவிற்கு எதிரான வாக்குகள் பிரியக்கூடாது என்றுதான் சொல்கிறோமே தவிர, விஜய்க்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என தெரிவித்தார்.
சிபிஐ விசாரணை விவகாரத்தில் திமுகவும், காங்கிரசும் குளிர்காய நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், உண்மை நிலை விஜய்க்கும், அவரது தொண்டர்களுக்கும் நன்றாகவே தெரியும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
















