சபரிமலையில் டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை 12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக கடந்த 6ஆம் தேதி ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 967 பக்தர்கள் வழிபாடு செய்ததாக கூறப்பட்டுள்ளது.
வாரத்தின் இதர நாட்களில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், கடந்த 3 நாட்களில் பக்தர்களின் வருகை குறைந்துள்ளதாக காணப்பட்டதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
















