அரசியல் நன்றாக இருந்தால் அது தமிழர் பொங்கல் அரசியல் நன்றாக இல்லை என்றால் அது திமுக பொங்கலாக வெறும் இலவசத்திற்காக மக்களை ஆடு மாடுகள் போன்று கூட்டி இருக்கிறார்கள் அண்ணாமலை பேச்சு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வாசுதேவநல்லூரில் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி ஏற்பாட்டில் 1008 பானைகளில் பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்
அவர் நிகழ்விடத்திற்கு வருகை தரும்போது பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் பெண்கள் ஏராளமானோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தமிழக பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், நையாண்டி மேளம் இசை மற்றும் ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட வரவேற்பாளித்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் முன்னாள் பாஜக தலைவரோடு செல்பி எடுத்துக் கொண்டனர்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்களை துணியால் கட்டிக்கொண்டு உரியடி அடித்து உடைத்து அசத்தினார் தொண்டர்கள் ஆரவாரத்துடன் மகிழ்ச்சி அடைந்தனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அண்ணாமலை தென்காசி மாவட்டத்திற்குள் நான் நுழையும்போது எனது சொந்த கிராமத்திற்குள் நுழைவது போல என்னால் உணர முடிகிறது இந்த பூமி சாதாரண பூமி அல்ல வெண்ணிக்காலாடி ஒண்டிவீரன், பூலித்தேவன் உள்ளிட்ட வீரர்கள் வாழ்ந்து மறைந்த பூமி ஒரே சட்டமன்ற தொகுதியில் மூன்று மாவீரர்கள் அமைந்த பெருமை வாசுதேவநல்லூர் தொகுதியை சாறும் இந்த தைப்பொங்கல் திருநாளில் நான் சொல்லக்கூடிய சத்திய வார்த்தை என்னவென்றால் தென்காசியில் நல்ல மனிதர்களை ஆட்சி பொறுப்பில் கொண்டு வந்து உட்கார வைக்க வேண்டும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் புழுதிக்காட்டை பார்த்தவர்களை அரியணை ஏற வைக்க வேண்டும் தேசிய சிந்தனை இருப்பவர்களும் மண்ணை நேசிப்பவர்களுக்கும் உங்கள் வாய்ப்பை கொடுக்க வேண்டும் எலுமிச்சை-க்கு பேர் போன புளியங்குடி எலுமிச்சை கன்றுகள் எங்களது தோட்டத்தில் நடவு செய்துள்ளேன்
வாசுதேவநல்லூர் பகுதியில் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்துள்ளது தற்போது அது குறைந்து விட்டது காரணம் செண்பகவல்லி அணை உடைப்பு தமிழக அரசு சரி செய்யவில்லை ஆனால் இதற்கு முன்பு முதலமைச்சராக இருந்த காமராஜர் மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் உடைப்பு ஏற்பட்ட போதெல்லாம் அணையை சரி செய்தனர்
திமுக தேர்தல் அறிக்கை எண்: 84 செண்பகவல்லி அணையை சரி செய்வோம் என்ற அறிக்கை என்ன ஆச்சு ஐந்து முறை கேரளாவுக்கு சென்ற முதலமைச்சர் இது பற்றி பேசவில்லை ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை நமது ஆட்சி அமையும் போது கேரள அரசுக்கு அழுத்தம் கொடுத்து செண்பகவல்லி அணை சரி செய்யப்படும் என அண்ணாமலை உறுதிபட தெரிவித்தார்.
தென்காசியில் கனிமவள கொள்ளை அதிகமாக நடந்து வருகிறது இயற்கை வளங்கள் அதிகமாக சுரண்டப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது
அதனை தடுத்து நிறுத்த வேண்டும் இதன் தாக்கமாக திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளராக இருந்த கடையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் இந்த கனிம வள சுரண்டலுக்கு எதிராக தனது கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்
அது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது திமுகவில் ஒரு சில நல்லவர்கள் மனசாட்சி உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என சந்தோசப்பட்டேன் அரசியல் பேசக்கூடிய இடம் இது இல்லை இருந்தாலும் அரசியலும் முக்கியம் அரசியல் நன்றாக இருந்தால் அது தமிழர் பொங்கல் அரசியல் நன்றாக இல்லை என்றால் அது திமுக பொங்கல் என மாறிவிடும் வெறும் இலவசத்திற்காக மக்களை கூட்டி வந்து ஆடு மாடுகளைப் போல் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்
அதுபோல நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது கம்பீரமாக தாய்மார்களை கூட்டு வந்து பொங்கல் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனை அடுத்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்…
















