பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள யோகா மற்றும் இயற்கை செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 23ஆம் தேதி சென்னையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மிக பிரம்மாண்டமாக பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளதாக தெரிவித்தார்.
















