கட்சி, அரசியல், கொள்கை கடந்து அண்ணாமலைக்கு துணை நிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மும்பைக்கு வந்தால் அண்ணாமலையின் கால்களை வெட்டுவேன் என ராஜ் தாக்கரே கூறியது கண்டனத்திற்குரியது எனவும்,
ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு அண்ணாமலை என்ற தனியொருவரை மட்டும் அவமதிப்பதல்ல; ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை தனி நபரல்ல; முதலில் அவர் தமிழ்த்தேசிய இனத்தின் மகன் என்றும்,
கட்சி, அரசியல், கொள்கை, கோட்பாடு என அனைத்தையும் கடந்து தமிழ் இனத்தின் மகனாக அண்ணாமலைக்கு துணை நிற்போம் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.
















