வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வனப்பகுதியில் இருந்து பிடித்து வரும் வங்காநரியை குலதெய்வமாக வணங்கி பின்னர் வனப்பகுதியில் விடுவதை கிராம மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி வங்காநரியை பிடித்தால் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
வங்கா நரி விவகாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக கிராம மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடாத நிலையில், வங்கா நரியை வாழவைப்போம் எனக்கூறி வனத்துறை சார்பில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
பேளூர் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் அரசு பேருந்துகளில் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















