சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ 2ஆம் ஆண்டு பயின்ற யுவஸ்ரீ என்ற மாணவி, நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதித்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் பை மற்றும் கடிதத்தை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து, வந்த தீயணைப்பு வீரர்கள் கூவம் ஆற்றில் குதித்து மாணவியை தேடி வந்த நிலையில், 20 மணி நேரத்திற்கு பிறகு இறந்த நிலையில் மாணவியின் உடலை மீட்டனர். இதனிடையே, தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று மாணவி யுவஸ்ரீ எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















