தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது, தமிழகம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்று மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம்
ஆந்திரா, மகாராஷ்டிராவில் இரட்டை என்ஜின் அரசு இருப்பதால் அபரிமிதமான வளர்ச்சி
தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைந்ததால் இதே வளர்ச்சியை பார்க்க முடியும்
“அனைத்து பிராந்தியங்களையும் மத்திய அரசு சமமாக பார்ககிறது”
“NDA கூட்டணி அரசுக்கு வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்தும் சமமே”
“தென்னிந்தியாவை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற விமர்சனம் தவறானது”
டெல்லியில் எல்.முருகன் வீட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பின் இதனை தெரிவித்தார்.
















