சென்னை ராமாபுரத்தில் பைக் ஷோரூமிற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கிய திமுக நிர்வாகியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராமாபுரத்தில் ஜெகதீசன், பிரபாகரன் ஆகியோருக்கு சொந்தமான கட்டடம் இருந்தது. பிரகாஷ் என்பவரிடம் அதனை விலைக்கு வாங்கிய இருவரும், தனியார் மோட்டார் சைக்கிள் நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளனர்.
இதையடுத்து, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை அந்த நிறுவனம் செய்து வந்துள்ளது.
அப்போது, கடைக்கு வந்த திமுக நிர்வாகி தர்மன், கடையின் முந்தைய உரிமையாளர் தனக்கு பணம் கொடுக்க உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் திமுக நிர்வாகியை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தர்மன், அடியாட்களுடன் கடைக்குள் நுழைந்து, பொருட்களை அடித்து நொறுக்கினார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















