வட இந்திய மற்றும் தமிழகப் பெண்களின் கல்வி தொடர்பான தயாநிதி மாறனின் பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தயாநிதி மாறன், நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக தெரிவித்தார். பெண்களை ‘அடுப்படியில் இரு’ என்று கூறுவது வட இந்தியா, ‘முன்னேறுங்கள்’ என்று கூறுவது தமிழ்நாடு என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அவர், பெண்கள் முன்னேற்றம் தான் தமிழ்நாட்டின் முன்னேற்றம் என குறிப்பிட்டார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக, இந்தி பேசும் மாநிலங்களையும், பெண்களையும் தயாநிதி மாறன் இழிவாகப் பேசியதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
















