தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு சீரியஸ் கட்சியாகவே தான் எடுத்துக்கொள்ளவில்லை என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விமர்சித்துள்ளார்.
சென்னையில் துக்ளக் நிறுவனத்தின் 56வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், காங்கிரஸ் நிர்வாகி திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது வாசகர்களின் கேள்விக்கு பதிலளித்த குருமூர்த்தி, மகாராஷ்டிராவின் வெற்றிக்கு வழிவகுத்த அமித்ஷா, தற்போது தமிழகத்தை கையில் எடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
பிறகு விஜய் குறித்த கேள்விகள் எழுந்த போது, விஜய்க்கு பின்னால் இருப்பது வெறும் கூட்டம் மட்டும்தான் என்று விமர்சித்த அவர், அந்த கட்சியை தான் ஒரு சீரியஸ் கட்சியாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், விஜய் முதல்வராவார் என்று பேசுவது அபத்தம் என்றும் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
















