சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் போராட்டத்தின்போது, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர் கண்ணனின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளான பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கடந்த 13-ம் தேதி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் கண்ணன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், ஆசிரியர் கண்ணனின் உடல் பெரம்பலூர் ரோஸ் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர் கண்ணன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜேசுதாஸ், இதுபோன்ற உயிரிழப்புகள் இனி தொடராமல் தடுக்க, திமுக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
















