ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க ராகுல் காந்தியிடம் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மல்லிகார்ஜூன கார்க்கே, ராகுல் காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில், ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க ராகுலை நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவையில் குறைந்தபட்சம் 3 முதல் 6 இடங்களை கேட்டுப்பெறவும், வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள இடங்களை வழங்க திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கவும் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், தவெக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என சில நிர்வாகிகள் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் கூட்டணி குறித்து பேசியதை யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
















