இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோவுக்கு 22 கோடி ரூபாய் அபராதம் விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம் கடந்த மாதம் விமான சேவைகளை ரத்து செய்ததன் மூலம் பயணிகளுக்கு இன்னல்களை ஏற்படுத்தியது. ஊழியர்களின் பணி நேரத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியது,
போதிய மாற்றுத் திட்டங்கள் இல்லாதது, மேலாண்மை குறைபாடுகள் ஆகியவற்றால் சுமார் 2,500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்தக் குறைபாடுகளை ஆராய்ந்த வான்வழிப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், இண்டிகோ விமான நிறுவனத்துக்கு 22 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
















