கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது, விழா மேடையில் அதிமுகவினருக்கு இடம் கொடுக்காமல் திமுகவினரே அமர்ந்து இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்.டி மலை பகுதியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி தொடங்கி வைத்த இந்த போட்டியில் திமுக நிர்வாகிகளே மேடையை சூழ்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு இடம் கிடைக்காத வகையில், திமுக எம்.எல்.ஏ மாணிக்கம் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொண்டார்.
இதனால் இரு கட்சியினரின் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் விழாவில் இருந்து அதிமுகவினர் வெளியேறினர். இது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அழைப்பிதல் கொடுத்துவிட்டு இருக்கை வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
















